Tamil Books Novels

Maaveerarkal kaalaththal saavathillai, avarkal kaalaththai uruvakippavarkal.

கோடையை சமா‌ளி‌க்க உதவு‌ம் முறைக‌ள்

கோடை த‌ற்போது உ‌ச்ச‌க்க‌ட்ட‌த்தை எ‌ட்டியு‌ள்ளது. பக‌ல் நேர‌ங்க‌ளி‌ல் அன‌ல் வா‌ட்டி எடு‌க்‌கிறது. பலரு‌ம் வெ‌யிலை த‌ணி‌த்து‌க் கொ‌ள்ள கு‌ளி‌ர்‌ந்த ‌நீரை‌க் குடி‌ப்பது‌ம், கு‌ளி‌ர்பான‌ங்களை அரு‌ந்துவதுமாக உ‌ள்ளன‌ர். இதனை‌த் த‌வி‌ர்‌த்து, அ‌திகமாக த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பது‌ம், பழ‌ச்சாறுகளை‌க் குடி‌ப்பது‌ம் ந‌ல்லது.

கோடையை சமா‌ளி‌ப்பத‌ற்கு பலரு‌ம் ப‌ல்வேறு முறைகளை‌க் கையா‌ள்வோ‌ம். கோடை‌யி‌ல் உடலை பாதுகா‌க்க எ‌ல்லோரு‌ம் ‌பி‌ன்ப‌‌ற்ற‌க் கூடியது‌ம், எ‌ளிதானது‌மான முறை பழ‌ங்க‌ளு‌ம், பழ‌ச்சாறு‌ம்தா‌ன். அதாவது பழ‌ங்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம் ‌நீ‌ர்‌த்த‌ன்மையு‌ம், சுவையு‌ம் கோடை‌க்கு ந‌ல்ல வர‌ப்‌பிரசாதமாக அமையு‌ம்.

பழ‌ங்களையு‌ம், பழ‌ச்சாறுகளையு‌ம் அ‌வ்வ‌ப்போது சா‌ப்‌பிடுவதா‌ல் ‌விய‌ர்வையா‌ல் உட‌ல் இழ‌க்கு‌ம் ‌நீ‌ர் ஈடு செ‌ய்ய‌ப்படு‌கிறது. அதும‌‌ட்டும‌ல்லாம‌ல் ஒ‌வ்வொரு பழமு‌ம் ஒ‌வ்வொரு ‌சிற‌ப்பு‌த் த‌ன்மையை‌ப் பெ‌ற்‌றிரு‌க்கு‌ம், அ‌ந்த பழ‌ங்களை சா‌ப்‌பிடு‌ம் போது அ‌ந்த பழ‌த்‌தி‌ன் ச‌த்து நமது உடலு‌க்கு‌க் ‌கி‌ட்டு‌கிறது.

த‌ற்போது மா‌ம்பழ‌ ‌சீசனாக இரு‌ந்தாலு‌ம் ம‌ற்ற வகை‌ப் பழ‌ங்களு‌ம் ‌கிடை‌க்‌கி‌ன்றன. மாதுள‌ம் போ‌ன்ற ஒரு ‌சில பழ‌ங்க‌ள்தா‌ன் ‌வி‌ற்பனை‌க்கு குறைவாக வரு‌கி‌ன்றன. த‌விர, ‌திரா‌ட்சை, முலா‌ம் பழ‌ம், ஆ‌ப்‌பி‌ள் போ‌ன்றவை அ‌திகமாக ‌வி‌ற்பனை‌க்கு வரு‌கி‌ன்றன. மு‌க்‌கியமாக ஆர‌ஞ்சு பழ‌ம் த‌ற்போது ‌சீச‌ன்தா‌ன். எனவே ஆர‌ஞ்சு பழ‌த்தை வா‌ங்‌கி வ‌ந்து சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌க்கலா‌ம்.

நா‌ம் ‌வீ‌ட்டி‌ல் ஆர‌ஞ்சு பழ‌ம், ‌திரா‌ட்சை போ‌ன்றவ‌ற்றை சாறு ப‌ி‌ழி‌ந்து குடி‌ப்பத‌ன் மூல‌ம், வெ‌ளி‌யி‌ல் பா‌ட்டி‌ல்க‌ளி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு கு‌ளிரூ‌ட்ட‌ப்ப‌ட்ட கு‌ளி‌ர்பான‌ங்க‌ளினா‌ல் ‌ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புக‌ளி‌ல் இரு‌ந்து‌ம் த‌ப்‌பி‌க்கலா‌ம்.

திராட்சை பழ‌‌ச்சாறு கோடையில் ஏற்படும் களைப்பை நீக்கி சக்தியை அளிக்கு‌ம். கோடை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் உடற்சூடு, நீர்க் கடுப்பு, வெட்டை சூடு, ஜீரண கோளாறுகளுக்குத் திராட்சை பழ‌ச்சாறு மரு‌ந்தாகவு‌ம் அமையு‌ம்.

முலாம்பழத்தை ‌சிறு து‌ண்டுகளாக நறு‌க்‌கி அதனுட‌ன் கு‌ளி‌ர்‌ந்த ‌நீரையு‌ம், ச‌ர்‌க்கரையு‌ம் சே‌ர்‌த்து குடி‌ப்பது வெ‌யிலு‌க்கு இதமாக இரு‌க்கு‌ம். முலா‌ம்பழ‌ச் சாறு நீர்ச்சுருக்கைக் குணப்படுத்தும். உண்மையில் முலாம்பழத்தில் தர்ப்பூசணியைவிட ‌நீ‌ர்‌த் த‌ன்மை அதிகம். எனவே முலாம்பழச்சாற்றை ‌தினமு‌ம் ஒரு வேளை அரு‌ந்‌தி வ‌ந்தாலே கோடை வெ‌யிலா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புக‌ளி‌ல் இரு‌ந்து த‌ப்‌பி‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

மாம்பழச்சாறு உடலு‌க்கு சூ‌ட்டை உ‌ண்டா‌‌க்கு‌ம் எ‌ன்றாலு‌ம், அதனை ப‌க்குவமாக சாறெடு‌த்து குடி‌ப்பது ந‌ல்லதுதா‌ன். கோடை மயக்கத்தை நீக்கும் ஆ‌ற்ற‌ல் மா‌ம்பழ‌ச் சாறு‌க்கு உ‌ண்டு.

இதே‌ப்போ‌ன்று ஆ‌ப்‌பி‌ள் பழ‌ச்சாறு, ப‌ப்பா‌ளி‌ச் சாறு, ச‌ப்போ‌ட்ட பழ‌ச்சாறு, த‌ர்‌பூச‌ணி‌ச் சாறு, பழ‌க் கலவைகளை‌க் கொ‌ண்டு‌ம் பழ‌ச்சாறு தயா‌ரி‌த்து ‌வீ‌ட்டி‌ல் உ‌ள்ளவ‌ர்க‌ள் அரு‌ந்‌தி வரலா‌ம்.

இது ம‌ட்டும‌ல்லாம‌ல், எலு‌மி‌ச்சை சாறு‌ம் உடலு‌க்கு ‌மிகவு‌ம் ஏ‌ற்றது. கு‌ளி‌ர்‌ச்‌சியை அ‌ளி‌ப்பதோடு உடலு‌க்கு எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தியையு‌ம் அ‌ளி‌க்கு‌ம். எலு​மிச்​சம் பழத்தை வெது​வெ​துப்​பான நீரில் சாறு பிழிந்து,​​ குளு​கோஸ் மற்​றும் தேன் கலந்து குடிக்க,​​ சுவை​யும் கூடும்.​ உடம்​பிற்​கும் நல்​லது.​

இரண்டு முன்று பழச்சாறுகள் கலந்து பழ‌ச்சாறு செய்யும்போது, இரண்டு தே‌க்கர‌ண்டி இஞ்சிசாறு விட்டுப் பருகுங்கள். சுவை ந‌ன்றாக இரு‌க்கு‌ம்.

பழ‌ங்க‌ள் ம‌ட்டும‌ல்லாம‌ல் இள‌நீ‌ர், த‌யி‌ர், மோ‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் கோடை‌யி‌ல் தாராளமாக நா‌ம் உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

இள​சான நுங்​கு​களை,​​ தோல் நீக்கி பா‌த்‌திர‌த்‌தி‌ல் போ‌ட்டு கையி​லேயே ம‌சி‌த்து அ‌த்துட‌ன்​ பால் சேர்த்து ஏலக்​காய்,​​ சர்க்​கரை கலந்து ‌சி‌றிது கு‌ளி‌ர்‌ந்த ‌நீ‌ர் ‌வி‌ட்டு பரு‌கினா‌ல் சுவை ‌பிரமாதமாக இரு‌க்கு‌ம். நு‌ங்கே அருமையாக இரு‌க்கு‌ம். நு‌ங்க‌ச் சாறு எ‌ப்படி இரு‌க்கு‌ம் எ‌ன்று சொ‌ல்லவா வே‌ண்டு‌ம். முய‌ற்‌சி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.

வீ‌ட்டி‌ல் இள​நீ‌ர் எ‌ளிதாக ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்றா‌ல் காலை‌யி‌ல் ஒரு ‌சில இள‌நீரை உடை‌த்து அ‌தி‌ல் இரு‌ந்து ‌நீ‌ர் எடு‌த்து அ‌த்துட‌ன் ‌சி‌றிது உப்பு, எலு​மிச்சை சாறைக் கலந்து கு‌ளி‌ர்பதன‌ப் பெ‌ட்டி‌யி‌ல் வை‌த்து ‌விடு‌ங்க‌ள். அ‌வ்வ‌ப்போது குடி‌த்து‌ வாரு‌ங்க‌ள். ‌‌நீ‌ர் சுரு‌க்கு எ‌ன்பதோ, அ‌க்‌னி‌க் கொ‌ப்புள‌ங்களோ உ‌ண்டாகாது. பு‌தினா சுவை ‌பிடி‌த்தவ‌ர்க‌ள் இள‌நீருட‌ன் ‌ஒரு ‌சில பு‌தினா இலைகளையு‌ம் போ‌ட்டு வை‌க்கலா‌ம்.

வெறு‌ம் மோரை‌ச் செ‌ய்து குடி‌க்காம‌ல், மோ‌ரி‌ல் ‌சி‌றிது க‌றிவே‌ப்‌பிலை, பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி ஆ‌கியவ‌ற்றை பொடியாக நறு‌க்‌கி‌ச் சே‌ர்‌த்து குடி‌ப்பது ந‌ல்லது.

வீ‌‌ட்டி‌ல் ஒரு பா‌த்‌திர‌‌த்‌தி‌ல் ‌நீ‌ர் அ‌திகமாக ‌வி‌ட்டு மோரை‌க் கல‌ந்து வை‌த்து ‌விடு‌ங்க‌ள். தேவை‌ப்படு‌ம் போது தேவை‌ப்படுபவ‌ர்க‌ள் எடு‌த்து‌க் குடி‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள்.

வெ‌ள்ள‌ரி‌க்கா‌யி‌ல் பெ‌ரிதாக எ‌ந்த ச‌த்து‌க்களு‌ம் இ‌ல்லாம‌ல் இரு‌ந்தாலு‌ம், அ‌திலு‌ள்ள ‌நீ‌ர்‌த் த‌ன்மை ‌ஜீரண‌ ச‌க்‌தியை ‌சீரா‌க்க உதவு‌கிறது. மேலு‌ம், வெ‌ள்ள‌ரி‌க்கா‌யி‌ல் உ‌ள்ள பொ‌ட்டா‌சிய உ‌ப்பு ‌‌சிறு‌நீரக‌ங்களை‌ப் பாதுகா‌க்க உதவு‌கிறது.

காலை‌யி‌ல் எழு‌ந்தது‌ம் வெ‌ள்ள‌ரி‌க்கா‌ய்‌த் து‌ண்டுகளை மோ‌ரி‌ல் போ‌ட்டு அதனுட‌ன் ‌சி‌றிது கொ‌த்தும‌ல்‌லி, இ‌ஞ்‌சி போ‌ட்டு வை‌த்து ‌விடு‌ங்க‌ள். இ‌‌ந்த மோரை‌ அ‌வ்வ‌ப்போது பரு‌‌கி வ‌ந்தா‌ல் ‌சிறு‌நீரக‌த் தொ‌ற்று ஏ‌ற்படுவதை‌த் த‌டு‌க்கலா‌ம்.

வெ‌ள்ள‌ரி‌க்காயை து‌ண்டுகளாக‌ப் போ‌‌ட்டு சா‌ப்‌பிடுவது‌ம், க‌ண்க‌ளி‌ன் ‌மீது‌ வை‌ப்பது‌ம் ந‌ல்லது எ‌ன்பதை ‌நீ‌ங்களே அ‌றி‌வீ‌ர்க‌ள்.

வீ‌ட்டி‌ல் கு‌ளி‌ர்பதன‌ப் பெ‌ட்டி இ‌ல்லையே எ‌ன்று கவலை‌ப் பட வே‌ண்டா‌ம். எ‌ளிய, ‌மி‌‌ன்சார‌ச் செலவு இ‌ல்லாத கு‌ளி‌ர்பதன‌ப் பெ‌ட்டி பானைதா‌ன். ஒரு ந‌ல்ல பானையை வா‌ங்‌கி வ‌ந்து அ‌தி‌ல் ‌நீ‌ர் ஊ‌ற்‌றி மண‌ல் ‌‌மீது வை‌த்து ‌விடு‌ங்க‌ள். ‌வீ‌ட்டி‌ற்கு வருவோரு‌க்கு பானை ‌‌நீரை‌க் கொடு‌த்து‌ப் பாரு‌ங்க‌ள். உ‌ங்களை மனமார புக‌ழ்வா‌ர்க‌ள்.

மன அழுத்தத்தை குறைப்பதற்கான உடற்பயிற்சி

பரபரப்பான இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லா துறையிலும் எல்லா பணிகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதுவே மன அழுத்தத்தை குறைப்பதற்கான தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது.

இந்த மன அழுத்தத்தை குறைக்க சில வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.இருக்கையில் அமர்ந்தவாறே இந்த உடற்பயிற்சியை செய்யலாம்.

1..தலையை இடதுபக்கமாக சாய்த்து இடதுபக்க காது தோற்பட்டையில் படும்படி சாய்த்து நன்றாக அழுத்தத்தை கொடுக்கவும்.வலது கையை தலையில் சிறிது அழுத்துவதன் மூலம் அழுத்தத்தைக் கொடுக்கலாம்.

2.இதே போன்று சமநிலையான ,இறுக்கமற்ற நிலையில் தலையை வலது பக்கமாக சாய்த்து வலதுபக்க காது தோற்பட்டையில் படும்படி சாய்த்து நன்றாக அழுத்தத்தை கொடுக்கவும்.

3.ஒரு நிலையில் இருந்து கொண்டு கண்களை இமைக்காது இடமிருந்து வலதுபக்கமாக தலையை சுழற்றவும், இவ்வாறே ஒரு நிலையில் இருது கொண்டு கண்களை இமைக்காது வலதுபக்கமிருந்து இடது பக்கமாக தலையை சுழற்றவும்.

4. இடது கையை மடித்து நெஞ்சுப்பகுதிக்கு மேலாக வலபக்க தோற்பட்டையில் படும்படி செய்து அழுத்தத்தை கொடுக்கவும்.

5. வலது கையை மடித்து நெஞ்சுப்பகுதிக்கு மேலாக இடதுபக்க தோற்பட்டையில் படும்படி செய்து அழுத்தத்தை கொடுக்கவும்.

6.இருக்கையில் அமர்ந்தவாறே குனிந்து உங்களது பாதங்களை தொடவும்.

7.இருக்கையில் அமர்ந்தவாறே கைகளை முன்நோக்கி நீட்டி இருகைகளையும் ஒன்று சேர்த்து பாதங்களைத் தொட முயற்சித்து அழுத்தத்தை கொடுக்கவும்.

8.வலதுகயை நீட்டி தூக்கி பெருவிரல் மற்றும் நடுவிரல்களுக்கு மாறி மாறி அழுத்தத்தை கொடுக்கவும், இதேபோல் இடது கைக்கும் செய்யவும்.

இந்த பயிற்சிகளை நீங்கள் வாரத்தில் 3- 4 தடவைகள் செய்யலாம் மேலும் 15-30 செக்கன்கள் வரை இதை செய்து வந்தால் மன அழுத்தம் குறையும்

க‌ண்களு‌க்கு பா‌ர்வை கொடு‌க்க 

பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌‌க் ‌கீரையை உ‌ப்‌பி‌ல்லாம‌ல் ‌சமை‌த்து தினமு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர தூர‌ப்பா‌ர்வை, பா‌ர்வை ம‌ங்குத‌ல் போ‌ன்ற க‌ண் நோய‌க்‌ள் குணமாகு‌ம்.

பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌ச் சா‌ற்றுட‌ன் சம அளவு ந‌ல்லெ‌ண்ணெ‌ய் சே‌ர்‌த்து ந‌ன்கு கா‌ய்‌ச்‌சி, அ‌ந்த தைல‌த்தை‌க் கொ‌ண்டு தலை‌க்கு கு‌ளி‌த்து வர ‌பி‌த்த நோய‌க்‌ள், தலை வ‌லி ‌நீ‌ங்‌கி க‌ண்‌ணி‌‌ற்கு ‌கு‌ளி‌ர்‌ச்‌சியு‌ம் ஒ‌ளியு‌ம் உ‌ண்டாகு‌ம்.

பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரையை அரை‌த்து ‌சிறு அடையாக‌த் த‌ட்டி க‌ண்க‌ளி‌ன் ‌மீது வை‌த்து‌க் க‌ட்டி வர க‌ண் ம‌ங்க‌ல் ‌பிர‌ச்‌சினைக‌ள் குணமாகு‌ம்.

பொ‌‌ன்னா‌ங்க‌ண்‌ணி, ‌கீழாநெ‌ல்‌லி, மூ‌க்‌கிர‌ட்டை இவை மூ‌ன்றையு‌ம் சம அளவு எடு‌த்து மை போல அரை‌த்து, அ‌தி‌ல் நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு எடு‌த்து காலை, மாலை இருவேளையு‌ம் ‌நீ‌ர் ஆகார‌த்துட‌ன் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர க‌ண் பா‌ர்வை ம‌ங்க‌ல், புகைபடல‌ம் போல காண‌ப்படுத‌ல், ஆர‌ம்ப ‌நிலை‌யி‌ல் உ‌ள்ள வெ‌ள்ளெழு‌த்து ‌பிர‌ச்‌சினைக‌ள் குணமாகு‌ம்.

பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரையை அ‌வ்வ‌ப்போது சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் க‌ண் கோளாறுக‌ள் ஏ‌ற்படாம‌ல் த‌வி‌ர்‌க்கலா‌ம். 

க‌ண் பா‌ர்வை‌க்கு ஏ‌ற்ற உணவுக‌ள்

வார‌த்‌தி‌ல் குறை‌ந்தது இர‌ண்டு முறையாவது நா‌ம் உ‌‌‌ண்ணு‌ம் உணவில் கீரையைச் சேர்த்துக் கொ‌ண்டு வ‌ந்தா‌ல், முதுமையில் ஏற்படும் க‌ண் பார்வை கோளாறுகளை தடு‌க்கலா‌ம்.

ச‌ர்‌க்கரை வ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌கிடை‌க்கு‌ம் கால‌ங்க‌ளி‌ல் அதனை அ‌வி‌த்தோ அ‌ல்லது உண‌வி‌ல் சமை‌த்தோ சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம். இ‌தி‌ல் உ‌ள்ள வைட்டமின் ஏ கண் பார்வையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

வைட்டமின் ஏ அடங்கிய பழங்களையும், தயிரையும் காலை உணவில் செர்த்து கொள்வதனால், க‌ண் பா‌ர்வையை ‌சீராக வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். பால், மீன், முட்டைகோசு, கேரட், கீரை, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அ‌திகமாக உ‌ள்ளது.

எனவே இவ‌ற்றை உ‌ண்டு வ‌ந்தா‌ல் க‌ண் பா‌ர்வை குறைபாடு உ‌ள்ளவ‌ர்களு‌க்கு‌க் கூட பா‌ர்வை‌த் ‌திற‌ன் அ‌திக‌ரி‌க்கு‌ம். குளுகோமா நோயைத் தவிர்க்கலாம். கா‌ய்க‌றிக‌ள், பழ‌ங்க‌ள், ‌கீரைகளை அ‌திக‌ம் உண‌வி‌ல் உ‌ட்கொ‌ள்வது க‌ண்ணு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது.

   

வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பிடு‌ங்க‌ள் சுறுசுறு‌ப்பாக வாழு‌ங்க‌ள்  

வாழைப்பழம் - எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழமாகு‌ம். மேலு‌ம், இத‌ற்கு கால‌நிலை எதுவு‌ம் இ‌ல்லாம‌ல் எ‌ல்லா கால‌ங்க‌ளிலு‌‌ம் ‌கிடை‌க்கு‌ம் ஒரு பழ‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. மேலு‌ம் வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷம் இரு‌ப்பதாக‌க் கூறு‌கிறா‌ர்க‌ள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அதாவது ‌தினமு‌ம் ‌மூ‌ன்று வேளை உணவு‌க்கு‌ப் ‌பிறகு ஒரு வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்‌டா‌ல் மூளை சுறுசுறு‌ப்பாக இ‌ய‌ங்கு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் அவ‌ர்க‌ள்.

மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது வாழை‌ப்பழ‌ம். அதாவது, வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ் உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் அ‌திகமாக‌க் கொண்டுள்ளது.

ஒரு ம‌னித‌ன் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை பெறு‌கிறா‌‌ன் எ‌ன்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழை‌ப்பழ‌த்‌தி‌ல் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க்க‌ள் ம‌ட்டு‌ம் ‌நிறை‌ந்‌திரு‌க்க‌வி‌ல்லை, மேலு‌ம், பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு மரு‌ந்தாகவு‌ம் கூட வாழை‌ப்பழ‌ம் உ‌ள்ளது. எனவே ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் ‌‌தினமு‌ம் ஒரு வாழை‌ப்பழ‌த்தையாவது சா‌ப்‌பிடு‌ம் வழ‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். அ‌ந்த கால‌த்‌தி‌ல் அத‌ற்காக‌த்தானோ எ‌ன்னவோ வெ‌ற்‌றிலையுட‌ன் வாழை‌ப்பழ‌த்தை வை‌த்து‌க் கொடு‌க்கு‌ம் முறை கடை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அவ‌ர்களு‌க்கு‌த் தெ‌ரியாததா எ‌ன்ன?

முத‌லி‌ல் மல‌‌ச்‌சி‌க்க‌ல் ‌வியா‌தி‌யி‌ல் இரு‌ந்து ம‌னிதனை‌க் கா‌‌ப்பா‌ற்று‌ம் இய‌ற்கை மரு‌ந்து வாழை‌ப்பழ‌ம்தா‌ன். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.

நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடி‌த்தா‌ல் சோ‌ம்ப‌ல் போயே‌ப் போ‌ச்சு.

மேலு‌ம், நெ‌ஞ்செ‌ரி‌ப்பு, உட‌ற் பரும‌ன், குட‌ற்பு‌ண், உட‌லி‌ல் வெ‌ப்ப‌நிலையை ‌சீராக வை‌க்கவு‌ம், மன அழு‌த்த‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு வாழை‌ப்பழ‌ம் ந‌ல்ல மரு‌ந்தாக உ‌ள்ளது.

புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் புகை‌ப்‌பிடி‌த்தலை ‌விடு‌‌ம்போது வாழை‌ப்பழ‌ம் அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் எ‌ளி‌தி‌ல் ‌விடுபடலா‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்படு‌கிறது.

நினைவுதிறன் அதிகரிக்க

நினைவுதிறன் அதிகரிக்க

உடலில் உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தா‌ன் உளுந்து எனப் பெயர் பெற்றது. இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.

உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துவர இடுப்பு வலி நீங்கும். காச நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.

உளுந்தை‌க் கொண்டு செய்த பண்டங்களை உண்டு வர நினைவுத்திறன் அதிகரிக்கும்.

உளுந்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

உடல் சதை வளர்ச்சிக்கு உளுந்து மிகவும் சிறந்தது. மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் இதனை களி கிளறி சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.

விஷக்கடிகளுக்கு தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பை வாயிலிட்டு மென்று சிறிது நல்லெண்ணையுடன் விழுங்கி விட விஷம் முறியும். 

ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு ‌தினமு‌ம் ஒரு ஆ‌ப்‌பி‌ள்  

ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு ‌தினமு‌ம் ஒரு ஆ‌ப்‌பி‌ள்   

முகப் பருவைத் தடுக்கும் வெந்தயம்

முகப் பருவைத் தடுக்கும் வெந்தயம்

வெந்தயம் நமது உணவு வகைகளில் வெகுவாக பயன் படுவதாகும்;குழம்பு, கறி, கூட்டு, பொரியல் வகைகளிலும், ரொட்டி, பிஸ்கட் தயாரிப்பிலும் வெந்தயம் பயன் படுகின்றது. மணப் பொருளான இது உணவில் பல்வெறு முறைப்படி சேர்க்கப்படுகின்றது. உணவுப் பொருளுக்க மணத்தை ஊட்டுவது மட்டுமன்றி, சத்துக் களையும் தருகிறது. வெந்தயக் கீரையும் உணவாகப் பயன் படுத்தப்படுகின்றது.

வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறு நீரைப் பெருக்கும். துவர்ப்புத் தன்மையுடையது. வறட்சியை அகற்றும் தன்மை உடையது.

மாதவிலக்கு வலி குறைய வெந்தயத்தை கசாயமாக்கி குடித்தால் வலி நீங்கும். முகப் பரு நீங்க ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து பருவில் பூச பரு மாறும்.

தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயமும் சேர்க்க பலம் ஏற்படும்.

நன்றி. மருத்துவ அறிவியல் மலர்.
 

பூ‌ண்டு வெறு‌ம் சமைய‌ல் பொரு‌ள் அ‌‌ல்ல

நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.

பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது.

பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம்.

பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.

எ‌ளிய கை வை‌த்‌திய முறைக‌ள் 

கோடை வெ‌யி‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌விய‌ர்‌க்குருவை‌ப் போ‌க்க, ப‌ன்‌னீருட‌ன் ச‌ந்தன‌த்தை‌க் கரை‌த்து ‌விய‌ர்‌க்குரு வ‌ந்த இட‌ங்க‌ளி‌ல் தட‌வினா‌ல் ‌விய‌ர்‌க்குரு ‌விரை‌வி‌ல் மறையு‌ம்.

முது‌கி‌ல் வரு‌ம் ‌சி‌ன்ன‌த் ‌சி‌ன்ன‌த் தேம‌ல்களு‌க்கு எ‌ளிய மரு‌ந்து பூ‌ண்டுதா‌ன். பூ‌ண்டை நசு‌க்‌கி தேம‌ல் வ‌ந்த இட‌த்‌தி‌ல் தட‌வினா‌ல் ‌விரை‌வி‌ல் தேம‌ல் மறையு‌ம்.

தலை‌யி‌ல் அ‌திகமான பொடு‌கு ஏ‌ற்ப‌ட்டு அவ‌தி‌ப்படுபவ‌ர்க‌ள், இர‌வி‌ல் வெ‌ந்தய‌த்தை ஊற வை‌த்து காலை‌யி‌ல் அதை அரை‌த்து தலை‌யி‌ல் போ‌ட்டு‌ ஊற‌வி‌ட்டு அல‌சினா‌ல் ‌விரை‌வி‌ல் குண‌ம் பெறலா‌ம்.

சொத்தை விழுந்த நகங்களில் மருதாணியை இலையைத் தொடர்ந்து அரைத்துப் பற்று போல் போட்டு வந்தால் அந்த சொத்தை மறையும்.

நெல்லி இலை, மருதாணி இலை ஆகிய இரண்டு இலைகளில் ஏதாவது ஒரு இலையை எடுத்து, அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அவித்து அந்த நீரிலேயே அடிக்கடி வாய் கொப்பளித்து வர, வாய்வேக்காடு ஆவியாகி மறைந்துவிடும்.

   

ம‌‌னித உடலை‌ப் ப‌ற்‌றி அ‌றிவோ‌ம்

ம‌‌னித உடலை‌ப் ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் 

ம‌னித உட‌லி‌ல் ஒரு கன அ‌ங்குல ர‌த்த‌த்‌தி‌ல் 7,000 கோடி அணு‌க்க‌ள் உ‌ள்ளன. ஒரு கன ‌மி‌ல்‌லி ‌மீ‌ட்ட‌ர் ர‌த்த‌த்‌தி‌ல் 50 ‌சிவ‌ப்பணு‌க்களு‌ம், 10,000 வெ‌ள்ளை அணு‌க்களு‌ம் காண‌ப்படு‌கி‌ன்றன.

சராச‌ரி ம‌னிதனுடைய இதய‌த்‌தி‌ன் எடை 340 ‌கிரா‌ம் ஆகு‌ம்.

உடலு‌க்கு‌த் தேவையான ஊ‌ட்ட‌ப் பொரு‌ள் இர‌த்த‌த்‌தி‌ல் குறை‌ந்து போ‌ய் ‌வி‌ட்டது எ‌ன்று மூளை இடு‌ம் க‌ட்டளையே ப‌சியாகு‌ம்.

ஆ‌க்டோப‌ஸ் ‌மீ‌னி‌ன் ந‌ஞ்சு இர‌த்த ஓ‌ட்ட‌த்தை ‌சீரா‌க்‌கி, இர‌த்த அழு‌த்த‌த்தை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் மரு‌ந்தாக பய‌ன்படு‌கிறது.

ந‌ம்மா‌ல் க‌ண் இமைகளை இமை‌க்காம‌ல் இரு‌க்கவே முடியாது. இ‌ந்த‌க் க‌ண்‌ணிமை‌க்கு‌ம் செய‌ல் 6 ‌விநாடிகளு‌க்கு ஏ‌ழு முறை ‌நிக‌ழ்‌‌கிறது.

சிறுநீரகங்களுக்கு ஓய்வ‌ளி‌க்கா‌தீ‌ர்க‌ள்! 

சிறுநீரகங்களுக்கு ஓய்வ‌ளி‌க்கா‌தீ‌ர்க‌ள்! 

உட‌லி‌ன் ‌மிக மு‌க்‌கியமான பாக‌ங்‌ளி‌ல் ‌சிறு‌நீரக‌ங்களு‌ம் ஒ‌ன்று. உட‌லி‌ல் வ‌யி‌ற்‌றி‌ன் அடி‌ப்பகு‌தி‌யி‌ல் அவரை ‌விதை வடிவ‌த்‌தி‌ல் இரு‌ப்பதுதா‌ன் ‌சிறு‌நீரக‌ம. இதனை ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் ‌கி‌ட்‌னி எ‌ன்‌கிறோ‌ம்.

இடுப்புக்கு மேலே விலா எலும்புக் கூண்டுக்குள் இரு பக்கமும் இருப்பதுதான் சிறுநீரகம். ஒரு ம‌னித‌ ‌சிறு‌‌நீரக‌த்‌தி‌ன் சராச‌ரி எடை 150 கிராம். 12 செ.மீ. நீளம் 5 செ.மீ. அகலம் கொ‌ண்டதாக ஒ‌வ்வொரு ‌சிறு‌‌நீரகமு‌ம் இரு‌க்கு‌ம். . சிறுநீரகத்தைப் பொருத்தவரை அதன் அளவு‌ம் ‌மிகவு‌ம் மு‌க்‌கியமாக‌க் கருத‌ப்படு‌கிறது. ஏதாவதொரு காரணத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும் நிலையில்தான் அதன் அளவும் குறையவோ அல்லது கூடவோ செய்கிறது.

‌‌சிறு‌நீரக‌த்‌தி‌ன் செய‌ல்களை எ‌ண்‌ணி‌ப் பா‌ர்‌த்தோமானா‌ல் நம‌க்கு இறைவ‌னி‌ன் ‌மீது ‌நி‌ச்சய‌ம் ஒரு ம‌தி‌ப்பு வரு‌ம். அ‌ந்த அள‌வி‌ற்கு ‌சிறு‌நீரக‌த்‌தி‌ன் ப‌ணி அமை‌ந்து‌ள்ளது.

உட‌லி‌ல் ப‌ல்வேறு நடவடி‌க்கைகளை கவ‌னி‌க்‌கிறது இ‌ந்த ‌சிறு‌நீரக‌ங்க‌ள். பொதுவாக ஒரு ம‌னிதனு‌க்கு இர‌ண்டு ‌‌சிறு‌நீரக‌ங்க‌ள் இரு‌க்கு‌ம். ஆனா‌ல் ஒரு ம‌னித‌ன் வாழ ஒரு ‌சிறு‌நீரகமே போதுமானதாக‌க் கருத‌ப்படு‌கிறது.

உட‌லி‌ல் உ‌ள்ள ர‌த்த‌த்தை வ‌டிக‌ட்டி அ‌தி‌ல் உ‌ள்ள க‌ழிவுகளை ‌சிறு‌நீராக வெ‌ளியே‌ற்று‌கிறது. உடலுக்கு‌த் தேவையான ‌நீ‌ர்‌ச்ச‌த்து சம அள‌வி‌ல் இரு‌க்கவு‌ம் உதவு‌கிறது. ர‌த்த அழு‌த்த‌த்தை‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் வை‌க்‌கிறது. உட‌லி‌ல் அ‌மில - கார‌த் த‌ன்மையை சம‌நிலை‌யி‌ல் வை‌க்‌கிறது.

இதும‌ட்டும‌ல்‌ல், உட‌லி‌ல் ‌சிவ‌ப்பணு‌க்க‌ள் உ‌ற்ப‌த்‌தி‌க்கு‌ம் உத‌வி செ‌ய்‌கிறது. அதாவது, உட‌லி‌ல் ‌சிவ‌ப்பணு‌க்க‌ள் உ‌ற்ப‌த்‌தி‌க்கு உதவு‌ம் எ‌த்தோபா‌ய்‌ட்டி‌ன் எ‌ன்ற ஹா‌ர்மோனை ‌சிறு‌நீர‌க‌ம் சுர‌க்‌கிறது. இ‌ந்த ஹா‌ர்மோ‌ன் சுர‌ப்‌பி‌ல் குறை ஏ‌ற்படு‌ம் போதுதா‌ன் ர‌த்த சோகை எ‌ன்ற ‌வியா‌தி ஏ‌ற்படு‌கிறது.

இ‌ப்படி ‌சிறு‌நீரக‌த்‌தி‌ன் ப‌ணிகளை அடு‌க்‌கி‌க்‌ கொ‌ண்டே போகலா‌ம். இவை ம‌ட்டு‌ம் வேலை செ‌ய்யாம‌ல் போனா‌ல் உட‌ல்‌நிலை எ‌‌வ்வாறு பா‌தி‌க்கு‌ம் எ‌ன்பதை வா‌ர்‌த்தைகளா‌ல் ‌விவ‌ரி‌க்க முடியாது.

ர‌த்த‌ம் சு‌த்‌திக‌ரி‌க்க‌ப்படாம‌ல் அ‌ப்படியே உட‌ல் முழுவது‌ம் பரவு‌ம். ர‌த்த‌த்‌தி‌ல் தேவைய‌ற்ற உ‌ப்பு, தாது‌ப் பொரு‌ட்க‌ள் த‌ங்‌கி‌விடு‌ம். இதனா‌ல் கை, கா‌ல்க‌‌ளி‌ல் ‌வீ‌க்க‌ம் ஏ‌ற்படு‌ம். ர‌த்த ‌சிவ‌ப்பணு‌க்க‌ளி‌ன் உ‌ற்ப‌த்‌தி பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு ர‌த்த சோகை ஏ‌ற்படு‌ம். இ‌ந்த ‌நிலை தொட‌ர்‌ந்து ‌நீடி‌த்தா‌ல் உட‌ல் சம‌ச்‌சீ‌ர் ‌நிலையை இழ‌ந்து மரண‌ம் ஏ‌ற்படு‌ம்.

இ‌ப்படி நாளெ‌ல்லா‌ம் நம‌க்காக பாடுபடு‌ம் ‌சிறு‌நீரக‌ம் ‌சீராக செய‌ல்பட வே‌ண்டு‌ம் எ‌னி‌ல் நா‌ம் செ‌ய்ய வே‌ண்டியது எ‌ன்ன? ‌தினமு‌ம் உடலு‌க்கு‌த் தேவையான ‌நீரை அரு‌ந்‌தி வர வ‌ே‌ண்டு‌ம். உடலு‌க்கு‌த் தேவையான ‌நீரை நா‌ம் அரு‌ந்து‌ம் போது ‌சிறு‌நீரக‌த்‌தி‌ன் வேலை எ‌ளிதா‌கிறது.

‌‌தினமு‌ம் உடலு‌க்கு‌த் தேவையான அளவு‌க்கு‌க் குறைவாக ‌நீ‌ர் அரு‌ந்துவதாலோ, நீ‌ர் அரு‌ந்தாம‌ல்‌ இரு‌ப்பதாலோ ‌சிறு‌நீரக‌த்‌தி‌ற்கு ஓ‌ய்வு அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ண்‌ணினா‌ல் அது ‌‌விரை‌வி‌ல் நிர‌ந்தர ஓ‌ய்வை எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

வரு‌ம் கோடை‌க் கால‌த்‌தி‌ல் ‌‌சிறு‌நீரக‌ங்களு‌க்கு அ‌திக ‌சி‌க்கலை ஏ‌ற்படு‌த்தாம‌ல், தேவையான அளவு த‌ண்‌ணீரை அ‌வ்வ‌ப்போது குடி‌த்து வாரு‌ங்க‌்‌ள். ‌அதுதா‌ன் ‌சிறு‌நீரக‌த்‌தி‌ற்கு நா‌ம் செ‌ய்யு‌ம் உத‌வியாக இரு‌க்கு‌ம்.

 

ஏப்ரல் முதலாந் திகதி முட்டாள் தினமானது எப்படி?

ஏப்ரல் முதலாந் திகதி முட்டாள் தினமானது எப்படி? 

ஏப்ரல் முதலாந் திகதி, முட்டாள் தினம். இந்த முட்டாள் தினம் எப்படி வந்தது?

இதற்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது.

பண்டை காலத்தில் ரோமானியர்களும், இந்துக்களும் ஏப்ரல்-1 மற்றும் அதை ஒட்டிய திகதிகளைப் புத்தாண்டாகக் கொண்டாடினர்.

அப்போது ஐரோப்பிய நாடுகளில் நாட்களைக் குறிப்பிட 'ஜூலியன்' எனும் பழங்கால காலண்டரைப் பயன்படுத்தி வந்தனர். அதிலும் புத்தாண்டு தினம் ஏப்ரல் முதலாந் திகதியாகவே இருந்தது.

1582ஆம் ஆண்டு பரிசுத்த தந்தையாக இருந்த 13ஆம் கிரிகோர, 'ஜோர்ஜி' என்ற புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். அதில் புத்தாண்டு ஜனவரி முதலாந் திகதி பிறப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இனி மக்கள் இந்தக் காலண்டரைத் தான் பின்பற்ற வேண்டும் என்று பரிசுத்த தந்தை கோரிக்கை விடுத்தார்.

இதைப் பிரான்ஸ் நாடு உடனே ஏற்றுக்கொண்டது. பிரான்ஸ் மன்னர் அந்நாட்டு மக்களை புதிய காலண்டரை பின்பற்றும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்று அனைவரும் ஜனவரி முதலாந் திகதியைப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடினர்.

வேறு சில நாடுகளும் இதை ஏற்றுக் கொண்டன.

இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் புதிய காலண்டரைப் பின்பற்றவில்லை. சில பகுதி மக்களுக்கு காலண்டர் மாற்றப்பட்ட தகவலே சென்றடையவில்லை. எனவே அவர்கள் முன்பு போல ஏப்ரல் முதலாந் திகதியைப் புத்தாண்டாகக் கொண்டாடினர்.

விவரம் தெரியாமல் இவர்கள் இன்னமும் ஏப்ரல் முதல் திகதியைப் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள், என்று புதிய காலண்டர் முறையை பின் பற்றியவர்கள் கருதினார்கள்.

எனவே எப்ரல் முதலாந் திகதியைப் புத்தாண்டாகக் கொண்டாடியவர்களை அவர்கள் முட்டாள்களாகக் கருதினார்கள். கேலி செய்து ஏளனமாகப் பேசினர்.

இதுவே காலப்போக்கில் ஏப்ரல் முதல் திகதி என்றாலே அது முட்டாள்கள் தினம் என்றானது. அன்றைய தினத்தை அடுத்தவரை ஏமாற்றும் தினமாகவும் மாற்றி கொண்டனர்.

ஏப்ரல் முதலாந் திகதியும் முட்டாள் தினம் என்று முத்திரை குத்தப்பட்டு வருடந்தோறும் நினைவுகூரப்படுகின்றது.

நன்றி: வீரகேசரி.

To Donate

Subscribe To Our Site