Tamil Books Novels

Maaveerarkal kaalaththal saavathillai, avarkal kaalaththai uruvakippavarkal.

புலிகளின்குரல் வானொலி

கவிதை

சாவும் வாழ்வும் விடுதலைக்கானால் தீயும் கூடக் குளிர்கிறதே...

நெஞ்சினிலே பஞ்சு வைத்து எண்ணெயிட்ட நெருப்பு
நில்லெனவே சொல்வதற்கு யாருமில்லை எமக்கு

சாகவென்று தேதி சொல்லி போகும் புயல் கறுப்பு
நாளை பகை மீதினிலே கேட்கும் எங்கள் சிரிப்பு

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை

பாடல்வரிகள்: புதுவை இரத்தினதுரை.
பாடியவர்: வர்ண. இராமேஸ்வரன்

மறைமுகக் கரும்புலிகள் பற்றிய பாடல்

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை -சில
வேங்கைகள் முகவரி அறிவதில்லை
பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை -கரும்
புலிகளின் கல்லறை வெளியில் இல்லை.

காலப் பெருவெளி நீளும் பொழுதிலும்
கண்ணில் தெரிவதுமில்லை -இங்கு
வாழும் தலைமுறை சாகும் கரும்புலி
வாழ்வை அறிவதுமில்லை -இவர்
வாசம் புரிவதுமில்லை

கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துமே
கைகள் அசைத்திட்டுப் போவார் -ஒரு
தொட்டில் வளர்ந்தவர் தோளில் சுமந்தவர்
சொல்லி புறப்பட்டுப் போவார் -எங்கள்
தோழர் நெருப்பென ஆவார்

நொடியில் ஒருபெரும் வெடியுடன் கரும்புலி
நெருப்புடன் சங்கமமாகும் -எங்கள்
விடிவினுக்காகவே இடியென எதிரியின்
முடிவுடன் அவருடல் சாயும் -அவர்
மூச்சும் பெரும் புயலாகும்.

பாடல் தரவிறக்க

விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது...

கொழும்புத் துறைமுகத்தில் 1996 இல் விடுதலைப்புலிகளின் கடற்கரும்புலிகள் தாக்குதல் நடத்தி சில கடற்கலங்களை அழித்த தாக்குதலின் நினைவாக வெளிவந்த பாடலிது.
12.04.1996 அன்று அதிகாலை கொழும்புத் துறைமுகத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

பாடல் இடம்பெற்ற ஒலிநாடா: கடற்கரும்புலிகள் பாகம் -3
பாடியவர்: சிட்டு
இசையமைப்பு: முரளி
பாடல்வரிகள்: புதுவை இரத்தினதுரை

கடலிடை றதீசும் அனலிடை ரவாசும்
காற்றிடை கலந்தவர் தானோ
கண்வழிந்தோடிட எங்கள் ஜனார்த்தனன்
காவியமானவன் தானோ
பொய்யாமொழியும் ரதனும் வரனும்
போனார் மீண்டும் வரவில்லை
மதனியும் விக்கியும் போயினர்
சுபாசும் எம்மிடம் வரவில்லை

விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது -துறை
முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்
சிறிதுநேரம் அமைதியாகி பொழுதும்கரைந்ததது -பின்னர்
இடியினோடு பகைவன்ஏறும் கலங்கள் எரிந்தன

அழகுபூத்த எமதுஊரை அழிக்கநினைத்தவா -எம்மை
அகதியாக்கி தெருவினோரம் மழையில்நனைத்தவா
கடலின்புலிகள் உனதுநகரை கலக்கிமுடித்தனர் -படைக்
கலங்கள்மூன்றை உடைத்தபோது உடலும்வெடித்தனர்

தலைவன்வளர்த்த உறவைநினைத்து கடலில்குதித்தனர் -வெடி
தாங்கிப்பகைவர் துறையுள்புகுந்து வெடித்துஅதிர்ந்தனர்
தமிழர்தேசம் எழுகஎழுக என்றுஆடினர் -எம்
தலைவன்பெயரை நிலவும்அறிய உரத்துப்பாடினர்

அமைதியாக உறங்கும்நேரம் பகைக்குஇனியில்லை -எங்கள்
அன்னைபூமி விடியும்வரைக்கும் எமக்கும்அதுஇல்லை
கடலின்புலிகள் இருக்கும்வரைக்கும் எமக்குப்பயமில்லை -இங்கு
கரியபுலிகள் வெடிக்கும்திசையில் பகைக்குஜெயமில்லை
 
            

 
உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்
கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில்
நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும்
ஆ..ஆ... ஆ....வேதனை யாருக்கடா தெரியும்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்

போய் வருகின்றோம் போய் வருகின்றோம்
என்று இவர் எம்மிடம் சொல்வார்கள்
இவர் பூமுகம் பார்த்து போய்வர சொல்வோம்
புன்னகையாலே கொல்வார்கள்.

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்

பொத்தி பொத்தி கைகளில் இவரை
பூவாய் வளர்கிறோம்
கரும்புலிகளுக்கு எங்கள் உயிரினை
ஊட்டி புயலாய் வளர்க்கிறோம்
காலம் வரையும் தோள்களில்
இவரை சுகமாய் சுமக்கிறோம் (காலம்..)
இவர் கைகளை ஆட்டி போனபின்னாலே
மறைவாய் அழுகிறோம்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்

உயிரினில் எழுதும் கவிதைகள் எனவே
உறவினை வளர்ப்பார்கள்
இந்த உறவுகள் ஒருநாள் விலகதும் இன்றி
எரிந்திட போவார்கள்
பாட்டும் கூத்தும் பகிடியுமாக
பால்குடி போல் இருப்பர் (பாட்டும்..)
பகைமீதினில் இவர்கள் மோதிடும் போதும்
ஞானிகளா இருப்பர்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்

வெடித்திடும் நாளை விரல்களில்
எண்ணி கணக்கெடுத்து இருப்பார்கள்
இந்த வேளையும் பகைவர் மிதினில்
எரியும் விருப்பினில் இருப்பார்கள்
அடிக்கடி எழுதும் வரிகளில்அண்ணன்
முகத்தினை கேட்பார்கள் (அடிக்கடி...)
வழி அனுப்பிடும் கடைசி நொடியினில்
எங்கள் உயிரினில் பூப்பார்கள்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்
கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில்
நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும்
ஆ..ஆ... ஆ....வேதனை யாருக்கடா தெரியும்

 


தாயகமண்ணே... தாயகமண்ணே... - எல்லாளன்

தாயகமண்ணே... தாயகமண்ணே...
தாயகமண்ணே... தாயகமண்ணே...
விடைகொடு தாயே விடைகொடு
விடைகொடு தாயே விடைகொடு
தலைவனின் தேசப்புயல்களுக்காக வழிவிடு தாயே வழிவிடு
வழிவிடு தாயே வழிவிடு
வழிவிடு தாயே வழிவிடு
தாயகமண்ணே... தாயகமண்ணே...

உன்னில் பிறந்தோம்... உன்னில் வளர்ந்தோம்... -தாயே
உன்னில் பிறந்தோம் உன்னில் வளர்ந்தோம்
உன்னில் எரியும் வரமில்லை - தாய்மண்ணே
உந்தன் மடியில் தவழும் மகிழ்வும் இனிமேல் எமக்கில்லை
உன்னில் பிறந்தோம் உன்னில் வளர்ந்தோம்
உன்னில் எரியும் வரமில்லை - தாய்மண்ணே
உந்தன் மடியில் தவழும் மகிழ்வும் இனிமேல் எமக்கில்லை

வீசும் காற்றே... விளையும் நாற்றே...
வீசும் காற்றே விளையும் நாற்றே
தேசப்புயல்கள் போகின்றோம்
வீசும் காற்றே விளையும் நாற்றே
தேசப்புயல்கள் போகின்றோம்
எம் வாசல் பிரிந்தே போகும் பொழுதில் தாயின் நினைவில் வேகின்றோம்
தாயின் நினைவில் வேகின்றோம்
தாயகமண்ணே... தாயகமண்ணே...

தேசப்புயல்கள் போகும் திசையில் மேகம் கசிந்தே மழை கொட்டும்
இடி மின்னல் காற்றும் எங்களைக் கண்டால் மேனி நடுங்கிக் கண் கொட்டும்
தேசப்புயல்கள் போகும் திசையில் மேகம் கசிந்தே மழை கொட்டும்
இடி மின்னல் காற்றும் எங்களைக் கண்டால் மேனி நடுங்கிக் கண் கொட்டும்
சிவனொளிபாத மலையது கூட கரும்புலி என்றால் பயம் கொள்ளும் - ஹஹா
சிவனொளிபாத மலையது கூட கரும்புலி என்றால் பயம் கொள்ளும்
கரிகாலனின் வீரம் காமினி ஊரில் நாளைய ராவில் பகை அள்ளும்
நாளைய ராவில் பகை அள்ளும்
குண்டு குருவிகள் எரியும் பகை கூடுகள் யாவும் கருகும்
குண்டு குருவிகள் எரியும் பகை கூடுகள் யாவும் கருகும்
வானிடை வந்த கழுகுகள் யாவும் தீயிடை முழுவதும் அழியும்
வானிடை வந்த கழுகுகள் யாவும் தீயிடை முழுவதும் அழியும்
அழியும்...
அழியும் அழியும் அழியும்.

தாயகமண்ணே... தாயகமண்ணே...
விடைகொடு தாயே விடைகொடு
விடைகொடு தாயே விடைகொடு
தலைவனின் தேசப்புயல்களுக்காக வழிவிடு தாயே வழிவிடு
வழிவிடு தாயே வழிவிடு
வழிவிடு தாயே வழிவிடு

காடும் வயலும் ஊரும் தெருவும் யாவும் கடந்தே நடக்கின்றோம்
துட்டகாமினி ஊரில் கரும்புலி வீரம் காட்டிட வெடிகள் சுமக்கின்றோம்
காடும் வயலும் ஊரும் தெருவும் யாவும் கடந்தே நடக்கின்றோம்
துட்டகாமினி ஊரில் கரும்புலி வீரம் காட்டிட வெடிகள் சுமக்கின்றோம்
நட நட எங்கள் தலைவனை நம்பு பகைவனும் விலகி வழி சொல்வான்
நட நட எங்கள் தலைவனை நம்பு பகைவனும் விலகி வழி சொல்வான்
எம் நரம்பினில் மூழும் விடுதலைத்தீயை எவனடா வந்து எதிர்கொள்வான்
எவனடா வந்து எதிர்கொள்வான்
கரும்புலி யாரெனத் தெரியும் - பகை
கனவுகள் யாவும் சரியும்
கரும்புலி யாரெனத் தெரியும் - பகை
கனவுகள் யாவும் சரியும்
இரு இரு நாளை விடியலில் எங்கள் வருகையின் காரணம் புரியும்
இரு இரு நாளை விடியலில் எங்கள் வருகையின் காரணம் புரியும்
புரியும்!

Ellalan Movie Theme Song mp3

ellalan video song

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று

ஈழப்போராட்டத்தில் "மறைமுகக் கரும்புலி" என்றொரு சொற்பதமுண்டு. தற்கொடைத்தாக்குதலை நடத்துபவர்கள் கரும்றைமுகக் கரும்புலிகள்புலிகள் என்ற பேரால் அழைக்கப்படுவர்.

இதென்ன மறைமுகக் கரும்புலி?

வீரச்சாவடையும் போராளிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும்.
பின்வரும் நினைவுநாட்களில் அவர்களின் கல்லறையிலோ நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர்.
அதாவது அவர்களின் பெயர், அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும் கெளரவமும் வழங்கப்படும்.

ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர். அதுவும் தற்கொடைத் தாக்குதலைச் செய்கின்றனர். அவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டா. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வரா.
கல்லறைகளோ நினைவுக்கற்களோ இரா. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறா. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள்.

இவர்களைக் குறிப்பதே 'மறைமுகக் கரும்புலிகள்' என்ற சொற்பதம்.
போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடைநீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள்.
தம் சுயத்தையே அழிக்கும் மனத்திடமும் விருப்பமும் இவர்களிடமுண்டு.
இவர்கள் பற்றிய ஒரு பாடல்தான் இது. திருமலைச்சந்திரனின் குரல் அருமையாக உணர்வை வெளிப்படுத்துகிறது. இன்றைய நாளில் இவர்கள் பற்றிய பாடலொன்றைப் பதிவாக்குவது பொருத்தமானதும்கூட.

கல்லறைகள் காணாது
கண்சொரிவாள் அன்னை
நீங்களில்லை என்றுஎங்கள்
வாய்கள் சொல்லவில்லை

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று
புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு
வாசல் வந்து ஆடுகின்ற பிள்ளையின் நிழல்பார்த்து
வாடுமந்த தாய்கள் நெஞ்சை கேட்க வந்த கூற்று
வாய்களின்றி பாடுதிங்கே காலநதிக்காற்று
வராற்றில் மூன்று பக்கம் விரிந்ததம்மா நேற்று

தேசமெங்கும் தேடுகின்ற விழிகளிங்கு ஆயிரம்
வாசமலர் கையெடுத்து நின்றகாலை ஆயிரம்
வீதியெங்கும் சுடரெரித்த சாமப்பொழுதிலே -விழி
நீரெடுத்து விளக்கெரித்தோம் எங்கள் மனதிலே
கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை
நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை

பந்தலிட்ட நினைவுக் கோயில் படங்கள் தேடுதும்மை
விந்தையென்று உலகம் இன்று சொல்லி நிற்குதும்மை
சுவரிலாடும் முகங்கள் இன்று தேடுதெங்கள் கண்கள்
சுவரில்லாமல் வரைந்து விட்ட ஓவியங்கள் நீங்கள்
வார்த்தையின்றி பாடுமோசை காற்றில் கேட்கவில்லை
காத்திருந்த விழியில் உங்கள் முகங்கள் மாறவில்லை

மழை குளித்த மரங்கள் மீது தளிர் பிறக்குது -எங்கள்
மல்லிகையில் புதியதொரு முகை வெடிக்குது
வெள்ளி வாகை தோன்றி காலை புலரும் பொழுதிது -இந்த
செய்தியெல்லாம் நீங்களென்று காலம் சொல்லுது
கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை
நீங்களில்லை என்று எங்கள் வாய்கள் சொல்லவில்லை

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று
காலமின்றி நேரமின்றி பாடுது ஒரு பாட்டு
ஊர்களின்றி பேர்களின்றி போன சேதி கேட்டு
வாசலெங்கும் வீசுமென்று தேடுதிங்கு காற்று
தேடுதிங்கு காற்று...
தேடுதிங்கு காற்று...
தேடுதிங்கு காற்று...

To Donate

Subscribe To Our Site