Tamil Books Novels

Maaveerarkal kaalaththal saavathillai, avarkal kaalaththai uruvakippavarkal.

படித்ததில் பிடித்தவை சில

 

நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம்

-புதுவை இரத்தினதுரை -

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை - போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர்.

•“இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்
எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்”
“துயரம் அழுவதற்காக அல்ல... எழுவதற்காக

- இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர், ஆதலால், ஆற்றுப்படுத்திய மனத்துடன் கவிஞருக்கு பதிவை…

”அட மானுடனே!
தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்
பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்
நிலம் சுமப்பதோ நீண்ட காலம்.
அன்னை மடியில் இருந்து கீழிறங்கி
அடுத்த அடியை நீ வைத்தது
தாயகத்தின் நெஞ்சில்தானே.
இறுதியில் புதைந்தோ
அல்லது எரிந்தோ எருவாவதும்
தாய்நிலத்தின் மடியில்தானே.
நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்
பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்
ஆதலால் மானுடனே!
தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்”
வாழ்க்கையின் மீதான அதி உன்னதமான நம்பிக்கைகளையும், அழகியலையும் தரும் இத்தகைய உக்கிரமான கவிதைகளை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை, தனது பதினான்காவது வயதில் கவிதை எழுத தொடங்கி, முப்பத்தேழாவது வயதில் (1935) விடுதலைப் பாதையில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர், ஒரு சிற்பக் கலைஞரும் கூட.

“எமது மக்களுடைய நுகத்தடிகளை உடைத்தெறிவதில் நானும் போராட வேண்டும் என்று நினைத்தேனே தவிர, தொடர்ந்தும் கவிதை எழுதிக் கொண்டிருப்பேன் என்ற நினைப்பில் நான் வரவில்லை. ஆனால், அமைப்புக்கு வருவதற்கு முன்பே எனது துறை கலையாக இருந்தபடியால், அமைப்புக்குள் நுழைந்த பின்பும் இயக்கத்தில் கலைப் பண்பாட்டுத் துறையை கவனிக்க வேண்டியதே எனக்கிடப்பட்ட பணி ஆகியது. இந்தப்பணியை நான் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்” என உறுதியுடன் கூறிவந்த புதுவை இரத்தினதுரை, ”ஈழத்தில் மட்டுமல்ல மானுடம் எங்கு வதைபடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுடைய மொழியில் எனது கவிதை பேசும்” என்கிறார்.

கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளை படித்தும், கவிதைப் பாடல்களை கேட்டும் பலநூறு இளைஞர்களும், இளைஞிகளும் விடுதலைப் படையினில் வந்து சேர்ந்து “மண் மீட்புக்காக” களமாடிக் கொண்டிருப்பதை சென்னையில் என் அண்டை வீட்டில் வாழும் ஈழத் தமிழ் நண்பர் யொனி, சொல்ல கேட்கும் பொழுது - கவிஞரின் “கவிதாயுதம்” இருப்பதிலேயே உயர் கருவியாக மதிக்கப்பட்டு - மெய் சிலிர்க்க வைக்கிறது.

ஈழமண்ணில் தோன்றிய மிகச்சிறந்த ஆய்வாளர்களும் ஒருவரான பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள், புதுவை இரத்தினதுரை கவிதைகள் பற்றி குறிப்பிடும்பொழுது,

•“...இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்
எல்லைகள் மீறி யார் வந்தவன்.
நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
நின்றது போதும் தமிழா - உந்தன்
கலைகள் அழிந்து கவலை மிகுந்து
கண்டது போதும் தமிழா இன்னும்
உயிரை நினைத்து உடலை சுமந்து
ஓடவா போகிறாய் தமிழா...”
என நெருப்பாக தொடங்கி நீளும் ஒரு பாட புதுவை இரத்தினதுரை எழுதியுள்ளார். அந்த பாடல் வரிகள் எத்தகைய தாக்கத்தை மக்கள் மனத்தில் ஏற்படுத்தியது என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன் - ஈழத்திலுள்ள திருநல்வேலி சந்தியில் 1993இல் ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் ஒருவர் தேநீர் குடித்துவிட்டு, சுருட்டு பற்ற வைத்துக்கொண்டு குளிருக்காக தலையையும் காதையும் மறைத்து தான் போட்டிருந்த போர்வையுடன் மிதிவண்டியில் ஏறிய நேரத்தில் இந்தப் பாடலும், “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலும் ஒலிபரப்பாக மிதிவண்டியில் அப்படியே நின்றபடி கேட்டுவிட்டு சென்றார். புதுவை இரத்தினதுரையின் புரட்சிக் கருத்துக்களையும் நெகிழ்ச்சியான அனுபவங்கலையும் பாடலில் கேட்டு, உறைந்துபோன அந்த ஈழத் தமிழனின் செயலை கண்டு மனம் நெகிழ்ந்தேன்” என்று பூரிப்போடு கா.சிவதம்பி எழுதியுள்ளார்.

விரும்பி இடம்பெயர்வது வேறு - விரும்பாமல் வன்முறை செய்து இடம்பெற வைப்பதென்பது வேறு. புலம் பெயர வைப்பவன் - இறுதியில் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அவனை மன்னிக்கவே கூடாது என மனம் பதற வைக்கிறது புதுவை இரத்தினதுரையின் சில படைப்புகள்.

•“ஊர் பிரிந்தோம்
ஏதும் எடுக்கவில்லை
அகப்பட்ட கொஞ்சம் அரிசி,
பருப்பு, இரண்டு பாய், இருமல் மருந்து,
மனைவியின் மாற்றுடுப்பு மூன்று,
காற்றுப் போய்க்கிடந்த மிதிவண்டி,
காணியுறுதி,
அடையாள அட்டை அவ்வளவே,
புறப்பட்டு விட்டோம்.
இப்போ உணருகிறேன்
உலகில் தாளாத துயரெது?
ஊரிழந்து போதல் தான்.”
இந்த நிலை - அரை நூற்றாண்டாக... ஈழமண்ணில் தொடர்கிறது. இது நாளையும் தொடரும் என்கிற போது... சொல்லி புலம்ப சொற்களில்லை. இயலாமையால் மனம் மௌனமாகிறது.

•“தம்பி பெஞ்சாதியின் தமையன் வீட்டில்
இரவில் பாய்விரிக்க எங்கு இடமிருந்தாலும்
அங்கு உடல் சரிப்பு.
வீட்டுக்காரரின் தூக்கம் கலையுமென
இருமலைக் கூட உள்ளே புதைப்பு
களவுக்கு வந்தவன் போல மனைவியுடன் கதைப்பு
கிணற்று வாளி தட்டுப்பட்டாலே படபடப்பு
ஒண்டுக்கிருத்தல்,
குண்டி கழுவுதல்
ஒவ்வொன்றையும் பயந்தபடி ஒப்பேற்றல்.”
இப்படி காலம் காலமாக சிதைந்தும் - மனம் சிதையாமல் இருப்பதெப்படி?. நம்பிக்கை. உண்மையின் மேல் ஈழத் தமிழர்கள் வைத்திருக்கும் பெரு நம்பிக்கை. இந்த நூற்றாண்டிற்கு மட்டுமல்ல - இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழனின் விடுதலைப் போராட்டத்திற்கான இந்த “எரிசக்தி” கையிருப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது.


•“இன்று நடை தளர்ந்தும்
நரை விழுந்தும் தள்ளாடும்
ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய இளைஞர்களே!
வெள்ளைத் தோல் சீமான்கள்
வீடு திரும்ப மூட்டை கட்டியபோது
நீங்கள் ஏன் ஊமையானீர்கள்?”
என்று ஒரு ஞாயமான வினாவை தனது கவிதை மூலம் புதுவை இரத்தினதுரை எழுப்புகிறார். செய்யவேண்டிய வேலையை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்து விட்டால் தலைமுறைகள் ஏன் தத்தளித்தாடுகிறது என்று கேட்ட கவிஞர், இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கும் சுருக்கென சூடு வைக்க தயங்கவில்லை,

•“உடல்கீறி விதை போட்டால்
உரமின்றி மரமாகும்
கடல் மீது
வலை போட்டால்
கரையெங்கும் மீனாகும்.
இவளின் சேலையைப் பற்றி
இந்தா ஒருவன்
தெருவில் இழுக்கின்றான்
பார்த்துவிட்டுப்
படுத்துறங்குபவனே!
நீட்டிப்படு.
உனக்கும் நெருப்பூட்டிக் கொளுத்த
அவனுக்கு வசதியாக இருக்கட்டும்.
‘ரோஷ’ நரம்பை
யாருக்கு விற்று விட்டுப்
பேசாமற் கிடக்கின்றாய்?”
இத்தகைய அற்புத படைப்பின் மூலம் - ஈழத் தமிழ்மக்களை போராட்ட களத்திற்கு செல்ல வழியமைத்தவர் புதுவை இரத்தினதுரை.

•“......சும்மா காற்றில் பற்றியா இந்தத் தீ மூண்டது?
இந்த அனல் பிடித்தெரிய எத்தனை காலம் பிடித்தது.
எத்தனை பேரைத் தீய்த்து
இந்த தீ வளர்த்தோம்.
எத்தனை பேரை நெய்யாக வார்த்தோம்
அணைய விடக்கூடாது
ஊதிக்கொண்டேயிரு.
பற்றியெரியப் போகுதெனப் பதறுவர்
ஊதுவதை நிறுத்தி விடாதே
இந்தத் தீயின் சுவாலையிற்தான்
மண் தின்னிகள் மரணிக்கும்.”
மீண்டும் ஊரில் நுழைய - தெருவில் நடக்க - தன் வீட்டு நிழலில் களைப்பாற துடிக்கும் என் உறவு ஈழத்தமிழினத்திற்கு எப்போது விடிவுகாலம் பொறக்கும் என்று எண்ணும்படியாக துக்கம் தொண்டையை அடைக்க என்னை நிலைதடுமாற செய்தது புதுவை இரத்தினதுரையின் கவிதைகள். அவரின் படைப்பை மொத்தமாக ( நூல்: பூவரசம்வேலியும் புலுனிக் குஞ்சுகளும்; ஆசிரியர்: புதுவை இரத்தினதுரை; வெளியீடு: விடியல் பதிப்பகம், பக்கம்: 432; விலை: ரூ.300) படித்து முடித்தபோது மண்ணைப் பற்றியும், மண்ணுக்கும் மனிதனுக்குமான பாசம் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும், உறவுப் பிரிவின் துயரங்களைப் பற்றியும், வாழ்க்கையின் உன்னதங்கள், அழகியலைப் பற்றியும், புரட்சியைப் பற்றியும், அறுந்துபோகாத உறுதியான நம்பிக்கைகள் எனக்குள்ளே கூடியிருப்பதை உணர்கிறேன்.

உண்மையான ஒவ்வொரு தமிழனிடமும் கவிதை மூலமாக புலம்பினார் புதுவை இரத்தினதுரை. மனித நேயமுள்ள உலகத்து மனிதர்களிடம் புலம்பினார். நெஞ்சு வெடித்து இனத்துக்காகக் கதறிய இந்த கவிஞனுக்கு என்ன சொல்ல போகிறது இந்த உலகம். பதறி துடிக்கும்போது கவனிக்காமல் போய் வழக்கம் போல் எழவுக்கு துக்கம் விசாரிப்பது போலவே இந்த பதிவையும் வருத்தத்தோடு எழுதுகிறேன்.

குறைந்த அளவு இரக்கத்தையாவது உலகம் காட்டியிருக்கக் கூடாதா ஈழமக்களுக்கு..? என் வாழ்நாள் முழுவதும் நினைத்து வெட்கப்படுவேன்.

•ஈழக் கவியரசே
நீயும் என்ன
பாவம் செய்தாயோ
நானறியேன்
ஈழத்தமிழனாய்
நீ பிறந்ததை தவிர

எம்மின மக்களை
எவனும் மதிக்கவில்லை
இந்த உலகில்

சிங்களவனாவது
பறவாயில்லை
தமிழனை மிருகமாய்
மதித்து சுட்டுக்
கொல்கிறான்

ஈழக்கவியரசே
என்ன பாவம்
செய்தாயோ
நானறியேன்
ஈழத்தமிழனாய் நீ
பிறந்ததைத் தவிர

நீ கூவியதெல்லாம்
கவிதையானது
உன் கவி கேட்டவர்
கண்களில் கண்ணீரெல்லாம்
கடலானது

பிறந்த மண்
சுட்டிருந்தாலும்
விட்டுப் பிரிந்தால்
காலமெல்லாம் நின்று
வலிக்கும் மனமென்று
பாட்டில் அழுதவன் நீ

பாவி நீ

பக்கத்து நாட்டில்
பிறந்திருந்தால்

தமிழனை மறந்து
தமிழ் எழுதி இருந்தால் கூட
தமிழர்களே விழா எடுத்து
உனக்கு
விருது வழங்கி
பாராட்டு விழா நடத்தி இருப்பார்கள்

ஏன் புதுவை நீ அமெரிக்காவில்
மைக்கேல் யக்சனாய்
பிறந்து இறந்திருந்தால்

எத்தனை தமிழர்கள்
அழுது கவிதையால் உனக்கு
மறுமொழி போட்டு இருப்பார்கள்

படுபாவம் நீ
தமிழ்கவி உன்னை கொன்ற
சிங்களவன் துப்பாக்கி கூட
தான் சிரித்ததற்காய் ஒரு
தடவையாவது அழுதிருக்கும்

ஆனால்
நீ இறந்த தகவலை
கண்ணீரோடு பகிர்ந்த என்
கண்ணீரை துடைக்க கூட
ஒரு வார்த்தை இட இங்கு
எந்த தமிழனும் இல்லை
என்பதால்

ஈழத்தமிழன் நானும்
பாவம்தான்....

யாரும் உனக்கு
அனுதாப அஞ்சலி
தெரிவிக்காமல் போனாலும்
என் கண்ணீர் கவி எழுதினால்
அது உன் இறுப்புக்காகத்தான்
இருக்கும்.

                                                                       முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் முடிவல்ல..

1.
சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்
என்று சொன்ன மகாகவியே
எப்படி?
கற்களினாலா?
கபால ஓடுகளாலா?

2.
டாங்கிகள்
கிளறிப் போட்ட சேற்றில்
கண்களைத் திறந்தபடி
செத்துக் கிடந்த
குழந்தையின் விழியில்
நீலவானம் சிறுத்துச் சிறுத்து
போர் விமானமாய்…
இரத்தம் உறைந்த
உதடுகளின் நெளிவில்
ஏளனம்

3.
சிட்னியில்
சிறுவர் பள்ளியில்
‘இலங்கையின் தலை நகரம் எது?’
வினாவுக்கு
விடை எழுதியது
புலம் பெயர் தமிழ்க்குழந்தை
‘கொழுப்பு’

4.
முகம் சிவந்தார் ஹிட்லர்
மகிந்த ராஜபக்ஷேவைப் பார்த்து
“ஆஸ்ட்விட்ஸ் புக்கன் வால்டு
என ஆங்காங்கே
கொலைக்களம் வைத்திருந்தேன்
யூதர்களுக்கு…
நீங்கள்
என்னை வென்று விட்டீர்கள்
மூன்றில் ஒரு பங்கு
நாட்டையே அல்லவா
படு கொலைக் கூடமாக்கிவிட்டீர்கள்
விட்டுத் தருகிறேன்
“பிரபஞ்சக் கொலைகாரர்” பட்டம்
உங்களவர்களுக்கே”

5.
டொரான்டோவில்
புலம் பெயர் மக்கள் ஊர்வலம்
சிறுவன் கையில் தட்டி
“உயிர்த்தெழுவோம்
உயிர்த்தெழுவோம்”
பக்கத்தில் சென்று கேட்டேன்
“தலைவர்
உயிரோடிருக்கிறாரா”?
சுட்டும் விழிச் சுடரோடு
சுடச் சுட வந்தது பதில்:
“தெரியாது
உயிரோடு இருக்கிறார்கள்
துரோகிகள்”.

6.
பசப்பு வார்த்தைகள்
பயனற்ற வார்த்தைகள்
பச்சோந்தி வார்த்தைகள்
கசப்பு வார்த்தைகள்
கண்ணீர் வார்த்தைகள்
கர்ஜனை வார்த்தைகள்
சுனாமியாய்த் தாக்க
ஈழத்துக் கடற்கரையில்
மேலும் ஒதுங்கின
தமிழர் பிணங்கள்!

7.
குண்டுபட்ட தழும்பு
கிளிநொச்சிச்
பனை உச்சியில்
தாய்க்கிளி
குஞ்சுக்கிளிக்குச்
சொல்லிற்று :
“சிறகு முளைத்ததும்
பறக்கலாம் கண்ணே
எல்லாத் திசையிலும்…
வேண்டாம் வடக்குத் திசை
அது நமக்கு எமன் திசை”.

8.
கதவு தட்டிப்
பாற்சோறு காட்டி
வெற்றியைக் கொண்டாடச்
சாப்பிடச் சொன்னான்
சிங்கள இளைஞன்
கதவு திறந்த தமிழர் பார்வையில்
தெரிந்தது
பாற்சோறு அல்ல
இரத்தம் கசியும்
பலிச்சோறு.

9.
யாரோ பத்திரிக்கை ஆசிரியராம்
தமிழ் நாட்டிலிருந்தாம்
அகதிகள் முகாமில்
ஆர்வத்தோடு கேட்டாராம்
“இனி யார் உங்களைப்
பாத்துப்பா”?
கிழிந்த லுங்கியை
இறுக்கிய பெரியவர் சொன்னார்
“எங்கள் உழைப்பு”.

10.
முள்ளி வாய்க்காலில்
பாதி கரையிலும் பாதி
நீரிலுமாகக்
கிடந்தது
விடுதலைப்போர்
வீரனின் உடல்
முகம்
மண்ணை முத்தமிட்டபடி
கால் பிடிவாதமாக
வடக்குத் திசையை
எற்றியபடி.

11.
பெய்ஜிங்கிலிருந்து
கொழும்புக்கு வந்தது
வாழ்த்துச் செய்தி!
“திட்டமிட்டு
வெற்றிபெற்றுவிட்டீர்கள்
நாங்கள்
திபேத்தில் செய்தது போல”

12.
கண்டியில்
படுத்திருந்தார் புத்தர்
கோரைப் பற்களுடன்
சிங்கள பிக்குகள்
ஊதுவத்தி கொளுத்தி
வழிபடலாயினர்
“புத்தம் சரணம் கச்சாமி
தமிழர் மரணம் கச்சாமி”

13.
இன்று துரோகிகள்
ஓடி ஒளிக்கின்றனர்
முப்பது நாடும் ஒன்றாய்
செய்த தவறை மறைக்க தமிழனுக்கு
தீர்வு கொடுப்பதுபோல் நடிக்கிறன
நாட்களை நகர்த்தியபடி..

14.
தமிழகத்திலும், புலத்திலும்
தலைவன் வருகைக்காக
பாதை அமைக்கின்றன
தாயக வடக்கிலும் கிழக்கிலும்
புலியில்லா வாழ்வை தமிழ்
உறவுகள் ஏற்க மறுக்க
தொடங்கி விட்டனர்

15.
உலக வல்லரசும், சிங்கள தேசமும்
தமிழர்களை முட்டாளாக்க
எடுத்த முயற்சியும் படுதோல்வியிலே
தன் மானமுள்ள ஒவ்வொரு
தமிழனும்
தலைவனுடன் இணந்து
தமிழீழம் நோக்கி நடக்க
புறப்பட்டு விட்டான்!!!

16.
ஏற்றுக் கொள்ள முடியாத
கோத்தபாய கொக்கரிக்கிறார்
பசீலும் பச்சையாக பேசுகிறான்
ராஜபக்சாவும் சோனியாவும்
கருணாநிதியை அழைத்து கற்ப்பூரம்
காட்டுகிறான் இதில்
சிங்கள சொறி நாய்களும்
எலும்புக்காக அலையும் துரோகிகளும்
தமிழர் அடையாளங்களை
அழிக்கிறான்கள்…

17.
முள்ளிவாய்க்காலோடு முடக்கி
கிடந்த தமிழினம்
முழு மூச்சோடு நிமிர்ந்து
நிற்கிறது
இனிமேலும் எவனும்
கிட்ட நெருங்கி எம்மை அடக்க
நினைப்பான என்ன??

18.
முள்ளிவாய்க்கால்
ஆன்மாவொன்று ..
சின்னத் தூக்கம் கொண்டோம் அன்றி
எங்கள் தேகம் வாடியது இல்லை
உங்கள் அண்ணன்
தங்கை பிள்ளைகள்
யாரும் கண்கள் முடியது இல்லை
உள்ளே உயிராய் உள்ளோம் உள்ளோம்
உங்கள் நினைவுடனே..
இங்கு வெல்லும்வரையும் வீசும்
காற்றை உள்ளோம்
உங்கள்
அருகினிலே..

ஏறக் குறைய முப்பத்தி எண்ணாயிரம் மாவீரர்களையும், இரண்டு லட்சம் மக்களையும் எம் மண் சுமந்து கொண்டுதான் எமது விடுதலைப் போர் பெரும் விருட்சமாக விழுது விட்டு இன்று உலகம் முழுவதும் விரிந்து நிற்கிறது. உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் காணத இழப்பை சந்திச்சு மீண்டும் நிமிந்து நிற்கிறது இதற்கு காரணம் முழுமையான அற்ப்பணிப்பும், கடின உழைப்பும்தான். ஆகவே உறவுகளே, உங்களுடைய தலைவர் உங்களுடதான் இருக்கிறார் அவரை முழுமையாக நம்புங்கள் அவர் நிச்சயம் எங்கள் எல்லாருடைய கனவு மெய்பட வைப்பார். அந்தக் காலம் மிகவும் எமக்கு அருகாமையிலே உள்ளது. அது எங்களுடைய தலைவர் காலத்தில் அது அமையும். தமிழீழம் என்பது வெறும் எங்களுடைய உயிர் அல்ல, ஒவ்வொரு தமிழர்களதும் உயிராயுதம் நிச்சயம் எந்த ஒரு ஆக்கிரமிப்பு சக்திகளுக்கும் உயிராயுதம் அடிபணியாது அதுவைரை மாவீரர் வழி தொடர்ந்து எம் பணி முடிப்போம் என் உறுதி எடுத்துக் கொண்டு அடுத்த எமது விடுதலைப் போருக்கு எம்மை தயார் படுத்துத்திக் கொள்வோம்.

”புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”

தொகுப்பு :கரும்புலிகள் உயிராயுதம்

துணிவுப் பறவைகள்

தூரப் பறந்துவிட்ட துணிவுப் பறவைகள்….!!!

 நேற்றுவரை நீங்கள் நேரிருந்தீர்
கண்களிலே
பூத்ததுபோற் பூத்துப் புன்னகைத்தீர்
எங்களுடன்
பேசிக்களித்தீர் போய்விட்டீர்.

தாயகத்தில்
வீசிவரும் காற்றில்
விரித்த சிறகெடுத்துத்
தூரப் பறந்துவிட்ட துணிவுப்

பறவைகளே!
ஈரவிழியிங்கு எனக்கின்னும்
காயவில்லை.
ஊரறியோம்

உங்கள் உறவறியோம்
தந்தையிட்ட பேரறியோம்
ஆனாலும் புகழறிந்து நிற்கின்றோம்.
நெஞ்சினிலே உங்கள்

நினைவுக்கு மாலையிட்டு
நஞ்சணிந்தோம்.
நீங்கள் நடந்தவழி நடக்கின்றோம்
தம்பியென்றும்

அண்ணன்
தங்கையென்றும்
எங்களுக்கோர்
வம்சவழி தோன்ற வாழ்ந்தோம்.

ஒன்றாகி
வந்த பகை வீழ்த்த
வரிசையிட்டுப் போனோமே.
செங்குருதி பார்ந்து திசை சிவந்து

எதிரிகளின்
தங்கிடங்கள் யாவும் தணலிற்
கருக்கிய பின்
வென்ற களிப்பில் வீடு வந்தோம்

அன்றிருந்து
இன்றுவரை உம்மை எவ்விடத்தும்
காணவில்லை.
கல்லறைக்குள் நீங்கள் கண்மூடித்
தூங்குவதாய்
சொல்லுகிறார்

உங்கள் தேகம் தூங்காதே!
மொட்டாவிழும் பூவினிலே
முகம் தெரியும்
கல்லறைக்குக்
கிட்டவர உங்கள் கண் தெரியும்
வீசுகின்ற
காற்றினிலும் மூச்சுக் கலந்து
எம்மை உயிர்ப்பிக்கும்.

இனிக் கூற்றெனவே
வரும்பகையைக்
குடிப்போம்
வென்றிடுவோம்!

-புதிவை இரத்தினதுரை
மீள் பதிவு: உயிராயுதம்

கருப்பு நாளல்ல!

ஆரியமும் காந்தியமும்

ஆளுக்கொரு கையை
பின்னால் நின்று பிடித்துக் கொள்ள
சீனத்தின் சதிக்கண்கள்
சீரிளைமையில் குறிவைக்க
சிங்களத்தின் கத்தி பல
குத்திக் குத்திக் கிழிக்கின்றது அவளை
திராவிடத்தின்
உச்சிப் பொழுது உமிழ்கின்ற ஒளியில்.

காப்பியமாம் மணிமுடியும்
கலைந்து சரியச் சரிய
காலணிந்த சிலம்போடு
சங்கிலிகள் தளையத் தளைய
வளையாத வளையின்று
நெரிய நெரிய
நெற்றிச் சூடுமணி
எற்றி அலைய அலைய
சிந்தாமணிகள்
சிதறச் சிதற
சிந்துகின்ற குடர்க்கீழே
மேகலையோ மறைய மறைய

ஓலமிட்டுக் கதறுகிறாள்
ஓடிவரக் கூவுகிறாள்
நாதியில்லை நானிலத்தில்

பாரெங்கும் விண்ணெங்கும் பார்த்து நிற்கும்
ஊரெங்கும் பார்த்துப் பார்த்து அலறுகிறாள்
பேதையவள் தேம்பித் தேம்பி அழுகின்றாள்

சுற்றிச் சுற்றிச் சுழல்கின்றாள்
சுட்டுவிழி கொட்டக் கொட்டப்
பெற்றுவிட்ட பிள்ளைகளை
உற்று உற்றுப் பார்க்கின்றாள்.

ஓட்டைத் துலாவோடு ஊத்தை பேசும் பிள்ளைகள்
சாட்டையொன்றும் தருகின்ற தறிதலைப் பிள்ளைகள்
எந்தச் சாதிக்காரியோ ஏனிங்கு எனுங்கூட்டம்
எந்தன் மதம் இவளோவென்று எட்டிப் பார்க்க வருங்கூட்டம்
வெந்ததெல்லாம் தின்றலையும் வேடிக்கைப் பெருங்கூட்டம்
சிந்தையிலே மந்தி வளர் செந்தமிழர் இவரிங்கு
சந்தமொடு பேசிப் பேசி சாகசங்கள் செய்கின்றார்
பந்தமென படுபாவி இன்னுமவள் நினைக்கின்றாள்!

சொந்தப்பிள்ளை மந்தங்கண்டு அவளை மேலும்
சிந்தச் சிந்தக் குத்துதடி சிங்களமும்
கத்தி தீட்டித் தீட்டிக் கொடுக்குதடி காந்தியமும்
நித்தஞ் செத்துச் செத்துக் குறைகின்றாள் - மைந்தர்மேல்
பித்தம் மிகை வைத்துவிட்டப் பாவிமகள்;
பித்தர்களைப் பெற்றுவிட்டப் பெண்பாவி;
எத்தர்களை வார்த்ததனால் ஏங்கி ஏங்கி
நித்தமிவள் சாகின்றாள் பெயர் தமிழன்னை!
மொத்தமாகச் சாநாளும் ஆமாவோ? அம்மவோ
கருப்பு நாள் இல்லையடி சொல்வார்போல் - அந்த
இருண்ட காலமே மீண்டதடி! அண்டத்து
இருட்டையெல்லாம் திரட்டி வந்து சூழ்ந்ததடி!
இருள் சூழ்ந்ததடி! பேரிருள் சூழ்ந்ததடி!
கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட என் குலத்திற்குக் கண்ணீர் அஞ்சலிகள்...

நாக.இளங்கோவன்


உன் வசமாகும் உலகு.. கரும்புலிகள் உயிராயுதம் 

உன் வசமாகும் உலகு....

காற்று நடக்கிறது கை வீசீ
பால் நிலவு பூத்துக் கிடக்கிறது பாலைப் பொழிந்தபடி..
நேற்றிரவைப் போல
நெடுங்கேணி குலுங்குகிறது
துரத்தே வெடிக்கும் சுடு குண்டின் அதிர்வினுக்கே
ஈரக்குடல் வற்றியிருக்கிறது...

நெஞ்சுக்குள்ளே எதோ திரண்டு எழும் மூச்சை அடைக்கிறது
சேதாரமாச்சா
எம் திருவாழ்வு
கைப் பிடிக்குள் மலந்திருந்த வாழ்வின்
மகிமை
வேரறுந்து தளர்ந்துள்ளதாதென்று...

சாவே எம் நாளாந்தம் என்றாச்சா
எமையேன்
இந்த இடரேன் தொடர்கின்றது
குன்றாய் நிமிர்ந்த
குலம் இடிந்து
பள்ளத்தில் விழும்படியான விதியேன் கவிழ்ந்துள்ளது...

பாழும் இருள் விலக்கும்
பருதியும் வானத்தில் ஏன் இன்னும் வந்தெழவில்லை
எம் தலையில் மானத்துக்கு அணியும் மகுடம்
ஏன் கிடைக்கவில்லை...

வேறொன்றுமில்லை விடுதலையின் மீது
எமக்கு ஆராத காதல் அனுபவமில்லை
அவதரித்த தாய் நிலத்தின்மீது
தனி அன்பு பெருக வில்லை
தீயுண்ட நெஞ்சம் சினம் கொண்டு சீறவில்லை
போத்தல் அடைத்த புலனாய்
நேற்று இரவு கூத்து முடிந்த கூத்தரங்காய் பேசாமல் போர்த்துக் கிடக்கிறோம்...

புதுவாழ்வு கை வருமா
வாராது காணும்
வல்லமைக்கு திலகமிட்டு போராட வேண்டும்
புறப்படுமோய் புறப்படுமோய்.. ஏன் காணோம் வானத்து அரசன் வந்திறங்கி
எம் கையில் தானமென விடுதலை தருவான...

நாமேதான் எழுந்தெமக்கு
எதிரான எதையும் சரித்துவிடும் பலத்தோடு எழுந்து பகை விழுத்தவேண்டும் காண்
அஞ்சாமை ஆற்றல்
அடங்காவலு வாழ்வை பஞ்சைப் போல எண்ணும் பக்குவம் இவை வேண்டும் நம்பிக்கை
வேண்டும்...

நாளை நமக்கெனும்
தென்பு எமக்கு வேண்டும் துணிவெனும் பலமுடைய தும்பிக்கை வேண்டும்
தொடர்ந்து அலைக்கும்
துயர் இருளை கண்டு சிரிக்கின்ற கனிவான மனம் வேண்டும்
தொண்டு தொழும்பறியாய் சுடரொளியாய்
என் நாளும் நடக்கும் பலம் வேண்டும்
நடுவழியில் விட்டகலா பிடைக்கும் தோள் வேண்டும்
பிறகெல்லாம் உன் வசமே.....!

புதுவை இரத்தினதுரை

 

தமிழா…: ஈழக் கவிதை 

எதிரி என்பவன் உன்னை குழி தோண்டி
புதைத்தாலும் கலங்காதே தமிழா
தோண்டி புதைத்த அடிக்கல்தான்
ஆயிரம் மாடிக்கு படிக்கல்..

உதிர்ந்துதான் போனாய் என்று
ஏங்கி நீ விடாதே கண்ணீர்
பள்ளத்தில் வீழ்கின்ற நீர்தான்
பாய்ந்தோடும் ஆறாய் சேரும்.
வானத்து நீர் வீழ்ந்துதான்
பெரு வெள்ளமாய் உலகையே மிரட்டும்
நிலத்தில் வீழ்கின்ற விதையே
பெரு விருட்சமாய் நிழல் தந்து நிற்கும்..!

தோல்வியை கண்டதும் வீட்டுக்குள் ஒழிந்து
சோகத்தில் உறங்கிட வேண்டாம்.
உறக்கத்தில் நீ இருந்தாலும்
பறக்க விட்டு விடு உன் புத்தியை

புதுமையை தேடு வாழ்வில்
அதை கண்டதும் ஏங்கணும் பகைவர்
பயத்தினால் நடுங்கணும் அவர்கள்

தமிழா இரவும் பகலும் உண்டேல்
அங்கு தோல்வியும் வெற்றியும் உண்டு
பகைவரின் வெற்றியின் பின்னால்

சில கயவர் நிச்சயம் இருப்பார்
தோல்வியில் அனைவரும்
அழுதால் அந்த கயவர் வெல்வார்கள்

இரை தேடி தோற்ற புலி
பசியாலே படுத்து செத்தது உண்டா?
தோல்விக்கு பயந்தால் அது அடிமைக்கு வித்திடும்

வெற்றிக்காய் நீ உழைத்தால்
அது உன்னை அரியாசனத்தில்
இட்டு மகுங்கள் சூட்டிடும்..!

நுட்பமாய் சிந்தித்து வீரமாய் நீ எழு
இரும்பே வளையும் இடியே முனகும்

ஓடும் நீருக்கு தடை இட்டால்
அது கூடி உரையே அழித்திடும்
ஓடி உழைக்கும் உன்னை தடுத்தால்
பகைவரின் தலைகள் தப்பாமல் உருளும்

தோல்வியை தந்தவனை தோல்விக்குள் தள்ளி
வெற்றியை அரவணைக்க தைரியமாய் நீ எழு

விழ்ச்சி நிலையில்லை அதன் தொடர்ச்சியே வெற்றி
தமிழா நாளையே பெரு வெற்றி உன்னை வந்து சேரும்
அது வரை காத்திரு..!

பாமினி.

தமிழன் மறக்கமுடியா திருநாள்...! 

பங்குனி 26 உலகத்தமிழன் மறக்காத நாள்
மறந்திட முடியாத் திருநாள்...!
புதிய படையொன்று தனியனாய்.
வான் தொட்ட முதல் நாள்....!
இராவண அரசன் பின்னர் முகில் தொட்ட
முதல் தமிழ் தனிப்படை....!
இயலாமை என்றெங்கள் எமது செயல்
வல்லமையில் இல்லை எனக்காட்டி விட்டார்..!

தனித்தமிழராய் வான் தொட்டு
சாதனை நிகழ்த்தி நின்றார்..!
ஈழத்தின் தலைவரின் மனதில் உதித்த
சரித்திர நாயகன் சஙகரால் உருப்பெற்று
உலகம் பேசிய வான் படை எம் படை.!.
பிறரிடம் கையேந்தி கால் தொட்டு வால்பிடித்து
பெற்றிடாத தனித்தமிழர் வான்படை..

தரை தொட்டோம் தவித்தாய்..!
கடல் தொட்டோம் கவிழ்ந்தாய் ...!.
வான் தொட்டோம் வாய் பிளந்தாய்.!

கன்னிப் பறப்பது கண்டது கட்டுநாயக்கா
கடைசிப்பறப்பது கண்டது களனிதிஸ்ஸ..
கலங்கி அதிர்ந்தாய் கண்காணிப் பெல்லாம்
கட்டிலின் கீழ் பதுங்கி விழி பிதுங்கி
விழித்தாய் விடிய விடிய...!
வந்த வழி தொரியாது போன வழித்தடமும் கிடையாது
உன்வாயில் வீரம் மட்டும் குறையாது வண்டு கொண்டு
தேடினாலும் தமிழன் வான்படை தொரியாது..

தொட்டது நீ ஓடு பாதையைதான்.. .!
நீ எம்மைதேடினாலும் நாடு நாடாய்
ஓடினாலும் அடங்கார் புலிகள் .!
நீ வாடி வதங்கி ஓயும் வரை ஓயார் தமிழர்..!

தரைப்படை கடல்படை குதிரைப்படை
யானைப்படை காண்பித்ததான் பண்டை தமிழர்
தனி வான்படையை காண்பித்தார் நம் தலைவர் ..!
கடலாலும் வரும் நிலத்ததாலும் வரும் வானாலும் வரும்
தமிழருக்காய் நியாயம் கேட்கும் தமிழர் படை
இது நிச்சயம் நடக்கும்...
காலங்கள் வேண்டும் சில காத்திருப்புக்கள் வேண்டும்..
அதுவரைக்கும நீ வென்றவனாய் இருந்து கொள்.

பாமினி

நொந்துவாழும் செந்தமிழர் நாம்

அன்னை தமிழ் படிக்க ஆனையிட்டாள்
அடுக்குமா என்கின்றான் சிங்களப்பகைவனவன்
சன்னலிலே சாறுதனை ஒதுக்கிவிட்டு
கள்ளினைப்பருகுதல் நன்றோ கூர்வீர்"

அங்காடிப்பெயர்ப்பலகை தமிழிலில்லை
ஆலையத்தில் வழிபாடோ தமிழிலில்லை
திரயிசையில் தூயதமிழ்ப்பாடல் இல்லை
செம்மழழைப்பெயர்கள்கூட தூயதமிழில் இல்லை இல்லை"
ஞாழமதில் தமிழநிற்க்கோர் நாடுயில்லை
நாடுயின்றிப்போனதால் நாதியில்லை"

திரைசூழும் ஈழத்திற்க்கோர் அமைதியில்லை
தீர்த்து வைக்க உலகமுமோ விரும்பவில்லை
விரைந்தொன்றுசேருங்கள் தமிழர்களே
விடிவுக்காய் முடிவெடுத்து வெற்றி கான்ப்போம்:

என்னதான் விலையேனும் கொடுத்துநிற்ப்போம்
எம்மையே தந்தேனும் மீட்டிடுவோம்
மீண்டுமொரு போரெனில் நாமெல்லாம் புலியாவோம்"

ஒற்றன்

                     வீரம் நிறைந்த மண்ணில் விடுதலை வித்துக்கள்

   செந்தமிழ் நாடு இப்போ செந்நிறமாயிருக்கிறது
விளை நிலங்கள் எல்லாம் வெறும் நிலங்கள் ஆகிறது
பருவ மழை பதிலாக பல்குழல் மழை பொழிகிறது
இனவாத அரசினால் எம்நிலம் இருண்டு கிடக்கிறது.

முதுபெரும் வீரர்கள் முரசு கொட்டிய பூமி இது
போர்த்துக்கேயர்இ ஒல்லாந்தர் போரிட்டுத் தோற்றார்கள்
ஆங்கிலேய ஆக்கிரமிப்பை ஆவேசமாய் எதிர்த்தார்கள்
விடுதலையை எம்மவர்கள் உயிர்மேலாய் கொண்டார்கள்

பண்டார வன்னியன் பறைசாற்றுகின்றான் பழந்தமிழ் வீரத்தை
சங்கிலிய மன்னனும் சாதித்துக் காட்டினான்
பலநூறு வீரர்கள் வித்தாகிப் போனார்கள்
வருகின்ற சந்ததிக்கு வலிமை சேர்ப்பதற்காய்...

எம் தலைவன் பின்னாலே எம்மிளையோர் இருக்கின்றார்
தானைத் தலைவனினால் தலை நிமிர்ந்தார் தமிழர்கள்
செய் அல்லது செத்துமடி என்று செய்து காட்டினார்கள்
ஓயாத அலைகளாய் ஓங்கி அறைந்தார்கள்....

சிங்கள சீண்டுதலால் சினந்து சீறினார்கள்
சிங்கத்தின் கோட்டைக்குள் புலிக்கொடி ஏற்றினார்கள்
பகைவனவன் பாசறையுள் கரும்புலியாய் நுழைந்தார்கள்
எதிரியவன் எல்லைக்குள் எரிமலையாய் எரிந்தார்கள்...

விடுதலையை வென்றெடுக்க விண்ணிலும் விரிந்தார்கள்
அலை கடலில் ஆங்கே அநேககளம் காட்டினர்கள்
விடுதலைக்காய் வீரர்கள் வித்தாகி வீழ்ந்தார்கள்
வித்தாக வீழ்ந்தவர்கள் விருட்சமாக வருவார்கள்

                                      இப்படித்தான் இப்போ என்தேசம் 

இப்படித்தான் இப்போ என்தேசம்
முகவுரை நான் சொல்ல - என்தேசம்
எனக்கு முடிவுரை சொல்லியது.
அறிமுகவுரை சொன்ன பலரை
முகவரி தொலைத்தது – என்தேசம்.
கொலு இழந்த கோயில்களும்
மகவிழந்த மங்கையரும்
மலிவடைந்து போவதனால்;
இப்போ நலிவடைந்து போகிறது - என்தேசம்
பசுமையும் பண்பாடும்
துளிர்த்த என்தேசம் - இப்போ
பல்குழலாலும் பதுங்கு குழிகளாலும்
தறி கெட்டு போய்விட்டது.
தெங்குகளாலும் தேக்குகளாலும்
நிரையிருந்த - என்தேசம்
குண்டுகளாலும் குழிகளாலும்
நரைவிழுந்து கிடக்கிறது
நம்மவர் காலைக்கட்டி
சிறையிட்டுக்கொள்கிறது
புனர்வாழ்வு என்ற பெயரில் - என்தேசம்
கைக்கட்டு போட்டு கண் கட்டு போட்டு
துப்பாக்கி சொல்கிறது
நம்மவர் நிலையை
என் தேசத்தில் பலர் இன்னமும்
காணாமல் போயுள்ளார்கள்
முந்திய காலமில்லை
முணுமுணுக்கிறார்கள் நம்மவர்- இப்பவும்….
இப்படித்தான் இப்போ என்தேசம்

                                                      தவிக்கும் தேசம்...

குருவிகள் எல்லாம்
கூடு கட்டி
நிம்மதியாய் வாழுது
நாங்கள் இங்கே
வீடு விட்டு
ஊரிழந்து
ஏதிலியாய்
தெருத் தெருவாய்
அலைந்து வாழ்கிறோம்
ஓடி ஒடி
களைத்துவிட்டோம்
நாம்
கடலில் விழுந்து சாவதா?

பகல் இரவாய்
பதுங்கு குழியில்
உறைந்தும் வாழ்கிறோம்
உலோகப் பறவை
கண்டு குண்டு போட்டால்
மண்ணோடு மண்ணய்
மறைந்தே போகிறோம்

பள்ளி கோயில்
எல்லாம் இங்கே
பாசறையாய்த் தெரியுதாம்
தமிழ்ப் பெண் வைத்திருக்கும்
கைக்குழந்தை
ஏ.கே 47 ஆகப் படுகுதாம்
சிறு குழந்தை
கிழவன் கிழவி எல்லாம்
பயங்கர வாதி என்றே கணக்கு

பச்சை அரிசிச் சோறும்
பாலும் தேனும்
புசித்து வாழ்ந்தவர்
இப்போ
விளைந்தது எல்லாம்
அழிந்ததனல்
பட்டினியாய்
பசிக்க வாழுறோம்

உதவி செய்ய வந்தவரையும்
தடுத்து துரத்திவிட்டு
எம்மை கூட்டோடு
அழிக்கவா போகிறார்?
இங்கே வாரும்
இங்கே வாரும்
என்றோ எம்மை
வீம்பாய் கூப்பிடுகிறார்
அங்கேபோனால்
சும்மாய் எம்மை விடுவாரா?
மனச்சாட்சியை
சிறைப்பிடித்து
மனித உரிமைபற்றி பேசுகிறார்

ஈழ மக்கள் நாம்படும்பாடு
யாருக்கிங்கே தெரியுது
துணிவிருந்தால்
வந்து பாரும்
உணர்ந்தால்தான்
அது உமக்குப் புரியும்

உலகத் தமிழினமே!
உங்கள் இரத்த உறவுகள் நாம்
தினம் செத்து மடிகின்றோம்
நீங்களும்
குரல் கொடுக்க மாட்டீரோ ??
 

To Donate

Subscribe To Our Site